என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பெண்ணின் வீடு சூறை
நீங்கள் தேடியது "பெண்ணின் வீடு சூறை"
பாரம்பரிய நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து சபரிமலைக்கு சென்ற பெண்ணின் வீட்டை சிலர் அடித்து நொறுக்கினர். #Sabarimala #SabarimalaProtests
கொச்சி:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்து அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த எதிர்ப்புக்கும் மத்தியில் ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையளர் கவிதா மற்றும் கேரளாவைச் சேர்ந்த பெண்ணியவாதி ரெகானா பாத்திமா ஆகியோர் இன்று போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்றனர். ஆனால் சன்னிதான வாசலை நெருங்கியபோது, பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதேசமயம், சபரிமலை கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் ரெகானா பாத்திமா புறப்பட்டுச் சென்ற தகவல் மாநிலம் முழுவதும் பரவிய நிலையில், கொச்சியில் உள்ள அவரது வீட்டை இன்று அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து நொறுக்கினர். வீட்டின் கதவு, ஜன்னல்கள் உடைக்கப்பட்டு பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #Sabarimala #SabarimalaProtests

இது ஒருபுறமிருக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததால் கோவிலுக்கு செல்வதற்கான முயற்சியில் சில பெண்கள் இறங்கினர். அவர்களுடன் சமூக ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள், செய்தியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அங்கு செல்வதற்கு ஆர்வம் காட்டினர். ஐப்பசி மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டதும் இந்த பெண்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர். ஆனால் அவர்களை சபரிமலைப் பாதைகளில் போராட்டக் குழுவினர் தடுத்து நிறுத்தினர்.
இந்த எதிர்ப்புக்கும் மத்தியில் ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையளர் கவிதா மற்றும் கேரளாவைச் சேர்ந்த பெண்ணியவாதி ரெகானா பாத்திமா ஆகியோர் இன்று போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்றனர். ஆனால் சன்னிதான வாசலை நெருங்கியபோது, பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதேசமயம், சபரிமலை கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் ரெகானா பாத்திமா புறப்பட்டுச் சென்ற தகவல் மாநிலம் முழுவதும் பரவிய நிலையில், கொச்சியில் உள்ள அவரது வீட்டை இன்று அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து நொறுக்கினர். வீட்டின் கதவு, ஜன்னல்கள் உடைக்கப்பட்டு பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #Sabarimala #SabarimalaProtests
×

X